தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வருகிற 10ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில்:
இடம் மற்றும் நாள்: “தூத்துக்குடி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோரம்பள்ளத்தில் 10.02.2023 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணி அளவில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
கல்வி தகுதி:
இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பல தனியார் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, டிரைவர் மற்றும் கணிணி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் கலந்து கொள்ளலாம்.
தேவையான ஆவணங்கள்:https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேற்கண்ட தகுதியுள்ள, தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தங்களது பயோடேட்டா மற்றும் கல்வி சான்றுகளுடன், தூத்துக்குடி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து இல்லை:
தனியார்துறை நிறுவனங்களில் பணி நியமனம் செய்யப்படும் நேர்வில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது. தனியார் நிறுவனத்தினர் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய இம்முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் தொடர்புக்கு 0461-2340159 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திக்க ஒட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.