தூத்துக்குடியில் துணிகரம் : வாட்ச்மேன் அறையில் வைத்து பூட்டி 1.50 லட்சம் மதிப்புள்ள முந்திரிகொட்டைகள் திருட்டு.
தூத்துக்குடியில் முந்திரிகொட்டை மாதத்திற்கு 5000 மெட்ரிக் டன் இறக்குமதி செய்யப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கு செல்வது வழக்கம். சில சமயங்களில் குடோன் வைத்து அதன்பின் செல்வதும் உண்டு.அதேபோல் முத்தையாபுரம் பகுதியில் ஒரு குடோன் முந்திரிகொட்டை வைத்துள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி முத்தையாபுரம் எம். சவேரியார்புரத்தை சேர்ந்தவர் ரோசரி சேவியர் (49). இவர் இப்பகுதியில் உள்ள ஷிப்பிங் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். அவர் பணிபுரியும் நிறுவனத்தின் முந்திரிக்கொட்டை மூட்டைகளை முத்தையாபுரம் பகுதியில் உள்ள குடோனில் வைத்திருந்தனர். சம்பவத்தன்று நள்ளிரவில் குடோனுக்குள் புகுந்த 4 மர்ம நபர்கள் வாட்ச்மேன் சிலுவை முத்துவை ஒரு அறையில் அவரை தள்ளி பூட்டியுள்ளனர்.
பின்னர் குடோனில் இருந்த ரூ.1.60 லட்சம் மதிப்பிலான 18 மூட்டை முந்திரிக்கொட்டைகளை திருடி கொண்டு தப்பி சென்று விட்டனர். மறுநாள் காலையில் குடோனுக்கு சென்ற ரோசரி சேவியர், அறையில் பூட்டப்பட்டு கிடந்த சிலுவை முத்துவை மீட்டுள்ளார். பின்னர் அவர் கொடுத்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்- இன்ஸ்பெக்டர் சேட்டைநாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து முந்திரிகொட்டை மூட்டையை திருடி சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஶ்ரீவைகுண்டம் நிருபர்
-முத்தரசு கோபி.