தூத்துக்குடியில் பரபரப்பு ஏடிஎம் சென்டரில் கொள்ளை முயற்சி!!
தூத்துக்குடியில் புதிய பஸ் நிலையம் அருகே, போல்பேட்டை மெயின் ரோட்டில் பெர்ஷன் பிளாசா எதிரில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி உள்ளது. இந்த வங்கிக்கு அருகில் ஏடிஎம் சென்டர் உள்ளது. இந்த ஏடிஎம் சென்டரில் பாஸ்புக் பதிவு செய்வதற்கு ஒரு மிஷின் உள்ளது. நேற்று இரவு ஏடிஎம் சென்டருக்குள் நுழைந்த ஒரு மர்ம நபர், ஏடிஎம் மெஷினை உடைக்க முயற்சி செய்து உள்ளார். ஆனால் அந்த மிஷினை உடைக்க முடியவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கொள்ளையன் அருகில் இருந்த பாஸ்புக் பதிவு செய்யும் மெஷினை தனது காலால் உதைத்து கீழே தள்ளி அந்த மிஷினை தூக்கி சென்று விட்டான். அப்போது நள்ளிரவு ஒருவர் பணம் எடுக்க வந்தபோது ஏடிஎம் சென்டரில் மிஷின்கள் உடைக்கப்பட்டு சிதறி கடந்தை கண்டு அதிலிருந்து போன் நம்பருக்கு போன் செய்தார். தகவல் அறிந்து வங்கியின் மேலாளர், தூத்துக்குடி மறவன்மடத்தில் வசித்து வரும் இளையபெருமான் மகன் செல்வகுமார் (39) என்பவர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார். பின்னர் இதுகுறித்து வடபாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் ஏடிஎம் சென்டரில் இருந்த சிசிடி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில் தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 4வது தெருவை சேர்ந்த ஜோன்ஸ் ராஜ் மகன் தேவராஜ் என்ற சாம் (22) என்பவர் பிரிண்டிங் மிஷினை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். ஏடிஎம் மிஷினில் 30 லட்சம் மேல் பணம் இருந்துள்ளது. மிஷினை உடைக்க முடியாததால் அந்த பணம் தப்பியது. இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஶ்ரீவைகுண்டம் நிருபர்
-முத்தரசு கோபி.