தூத்துக்குடி மாவட்டம், கூட்டாம்புளி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சிவலிங்கம்நாடார் மகன் வெங்கடேசன் (43). இவர் வெளியூருக்கு சென்றிருந்த தனது மனைவியை அழைத்து செல்வதற்காக கூட்டாம்புளி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் வெங்கடேசனிடம் தகராறு செய்து அவரை கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வருவதை அறிந்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்து சென்றது. படுகாயமடைந்த வெங்கடேசன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சம்பவத்தில் ஈடுபட்டதாக தூத்துக்குடி திரு.வி.க நகரைச் சேர்ந்த வேல்சாமி மகன் காளியப்பன் (எ) காடை காளியப்பன் (27) மற்றும் தூத்துக்குடி புதுக்கோட்டை பிரகாஷ் நகரைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் மாதேஸ்வரன் (22) ஆகியோரை கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
காளியப்பன் (எ) காடை காளியப்பன் மீது ஏற்கனவே தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உட்பட 10 வழக்குகளும், புதுக்கோட்டை காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி உட்பட 7 வழக்குகளும், சிப்காட் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உட்பட 7 வழக்குகளும், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும் என 25 வழக்குகளும், எதிரி மாதேஸ்வரன் மீது ஏற்கனவே தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உட்பட 11 வழக்குகளும், திருநெல்வேலி பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் என 12 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஶ்ரீவைகுண்டம் நிருபர்,
-முத்தரசு கோபி.