தூத்துக்குடி மாவட்டத்தில் 30 மக்கள் நல்வாழ்வுத்துறை காலிப்பணியிடங்கள்!
மொத்த இடங்கள்:
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் இயங்கி வரும் தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் கீழ் உருவாக்கப்பட இருக்கும் நலவாழ்வு மையங்களில் பணியாற்ற 30 காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை என அறிவிப்பு வெளியிடப்
அறிவிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் தேசிய சுகாதார பணி திட்டத்தின் கீழ் புதிதாக உருவாக்கப்பட இருக்கும் சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்களில் ஒப்பந்த அடிப்படை மருத்துவர்,பல்நோக்கு சுகாதார பணியாளர் (சுகாதார ஆய்வாளர் நிலை 2) மற்றும் மருத்துவமனை பணியாளர் ஆகிய காலிப்பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிப்புரிய ஆட்கள் தேவை என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தோடு இணைக்க வேண்டிய முக்கிய சான்றிதழ்கள் :
- பிறப்பு சான்றிதழ்.
- சாதி சான்றிதழ்.
- இருப்பிட சான்று.
- வருமான சான்றிதழ்.
- நன்னடத்தை சான்றிதழ்.
- அனுபவ சான்றிதழ்.
- ஆதார் கார்டு.
- 10 மற்றும் 12வது வகுப்பு சான்றிதழ்கள்.
- பட்டப்படிப்பு கல்வி சான்றிதழ்கள்.
- மாற்றுத்திறனாளியாக இருந்தால் அதற்கான சான்றிதழ்.
எப்படி விண்ணப்பிப்பது?
https://thoothukudi.nic.in/notice_category/recruitment/
விண்ணப்பத்தை பெற தூத்துக்குடி DHS இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும். உங்கள் வேலைக்கான விண்ணப்பத்தை பிரிண்ட் செய்து சரியாக பூர்த்தி செய்யவும். மேற்கூறிய அனைத்து சான்றிதழ்களையும் இணைத்து தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்க முகவரிக்கு அனுப்பவும்.
13.2.2023 தேதி மாலை 5 மணிக்குள் உங்கள் விண்ணப்பங்களை தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு பின் கிடைக்கும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கபடாது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் / துணை இயக்குநர், சுகாதாரப் பணிகள் அலுவலகம், மாப்பிள்ளையூரணி, தூத்துக்குடி-628002.
நாளைய வரலாறு செய்திக்காக,
-வேல்முருகன், தூத்துக்குடி.