தூத்துக்குடி 2 ஆம் ரயில்வே கேட் பாதையை பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க முடியுமா…! இந்த ஒரு பாதை இல்லாமல் தூத்துக்குடியில் போக்குவரத்து சாத்தியமாகுமா…!
ஏனென்றால்…… மதுரை-தூத்துக்குடி வரை இரட்டை வழி ரயில் பாதை அமைக்கும் திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த பாதையில் மணியாச்சி வரை ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு ரயில் சோதனை ஓட்டங்கள் முடிவடைந்துள்ளன. தொடர்ந்து இந்த ரயில் வழித்தடம் தூத்துக்குடி ரயில் நிலையம் வரை அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மீளவிட்டானை அடுத்து சின்ன கண்ணுபுரம், புதிய பேருந்து நிலையம் கடந்து வரும் பாதை இரண்டாம் கேட் பாதை அனைத்து பகுதியிலும் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இரண்டாவது ரயில் பாதை அமைக்கும் போது ரயிலில் வந்து இறங்கும் பயணிகளுக்கு தேவையான நடைமேடை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகளுக்காக இரண்டாம் கேட் அருகே பல்வேறு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கட்டுமான பணிகளின்போது கனரக இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கனரக கட்டுமான பொருட்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன. இந்த கட்டுமான பொருட்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்தை நகர்த்துவதற்கு பளுதூக்கும் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக இரண்டாம் கேட் பகுதியில் அவ்வப்போது போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.
அங்கு கிடைக்கக்கூடிய சிறிய பகுதி வழியாக ஒரு சில வாகனங்கள் மட்டும் செல்ல முடிவதால் பல வாகனங்கள் ரயில்வே தண்டுவாளத்தை கடக்க சிரமப்படுகின்றன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே இரண்டாம் கேட்டை கடந்து செல்ல வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். சில நிமிடத்தில் கடக்க வேண்டிய பகுதியை கடக்க பல நிமிடங்கள் ஆகின்றன. எனவே இருசக்கர வாகன ஓட்டிகள், குறிப்பாக நான்கு சக்கர வாகன ஓட்டிகள், அவசரப் பணிக்காக செல்லக்கூடியவர்கள் 2ஆம் கேட் ரயில் பாதையை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது என மை சிட்டி கருதுகிறது. இது தூத்துக்குடியில் சாத்தியமாகுமா…
நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடியில் இருந்து,
-வேல்முருகன்.