தெய்வகுலம் காளியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு திவான்சாபுதூரில் குடியிருக்கும் முப்பெரும் தேவிகளை குளிப்பாட்டி பக்தர்கள் பரவசம்!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட திவான்சாபுதூர் கிராமத்தில் குடியிருக்கும் முப்பெரும் தேவிகள் ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ
நாடுகாணியம்மன் உள்ளிட்ட அகிலம் போற்றும் அன்னைகளுக்கு மாசி மாத திருவிழா 14.2.2023 அன்று முதல் சீரோடும் சிறப்போடும் நடைபெற்று வருகிறது.
இவ்விழாவின் நிகழ்ச்சி நிரல் படி கடந்த வெள்ளிக்கிழமை 24.02.2023 அன்று ஸ்ரீ விநாயகர் பொங்கல் மற்றும் அலங்கார தீபாரதனை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து இன்று 27.02.2023 அதிகாலையில் திவான்சாபுதூர் ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் இருந்து 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் 100க்கும் மேற்பட்டோர் ஆனைமலை சேத்துமடை பகுதியில் உள்ள தெய்வகுளம் காளியம்மன் கோவிலில் புண்ணிய தீர்த்தம் எடுத்து வர புறப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் தெய்வகுல காளியம்மன் கோவிலில் சிறப்பு அன்னதானம் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.
இதன் பின்பு தெய்வகுலம் காளியம்மன் கோவிலில் இருந்து புண்ணிய தீர்த்தம் எடுத்துவரப்பட்டு மீனாட்சிபுரம் ரயில்வே கேட் பகுதியில் இருந்து மேளதாளம் முழங்க திவான்சாபுதூர் வீதிகள் வழியாக ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ நாடுகாணியம்மன் மற்றும் இவ் ஊரில் குடியிருக்கும் சகல தெய்வங்களுக்கும் புண்ணிய தீர்த்தம் கொண்டு குளிர்ச்சி பெற செய்து பக்தர்கள் பரவசமடைந்தனர்.
செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.