நாகர்கோவில், பூதப்பாண்டியில் ஜீவா நூல் நிலையம் செயல்பட்டு வருகிறது இந்நூல் நிலையத்திற்கு துவரங்காடு பகுதியைச் சேர்ந்த இல்லம் தேடிக் கல்வி ஆசிரியர் L. இந்திரா வீரபாகு இல்லம் தேடிக் கல்வி மாணவச் செல்வங்களை அழைத்துச் சென்று அங்கு இருக்கும் இந்திய விடுதலைப் போராட்ட தியாகிகளின் புகைப்படங்களை காண்பித்து வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறினார் பின்பு வரலாற்று சிறப்பு மிக்க தகவல்கள் நிறைந்த புத்தகங்களை மாணவர்களுக்கு கொடுத்து படிக்கச் செய்து அறிவு திறனை மேம்படுத்தினார்.
ஜீவா நூல் நிலையத்தை பார்வையிட்ட இல்லம் தேடி கல்வி ஆசிரியர் இந்திரா கூறுகையில் குழந்தைகளுக்கு சிறு வயது முதலே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவது மிகவும் முக்கியமானது ஆகும் பூதப்பாண்டி ஜீவா நூல் நிலையத்தை புனரமைக்க வேண்டும் அறிவு சார்ந்த பல நல்ல நூல்களை இந்த நூலகத்தில் இடம் பெற வேண்டும்,
வளர்ந்து வரும் நாளைய தலைமுறையினருக்கும் பயன்படும் வகையில் மனித நேயம் புத்தகங்கள் அடிப்படை சட்ட உரிமைகள் போன்ற புத்தகங்கள் வரவழைத்து பயன்படும் படி வழிமுறை செய்ய வேண்டும் என்றார். மேலும் ஜீவா நூல் நிலையத்தை புரனமைக்க ஆசிரியையும் மாணவர்களும் கோரிக்கை விடத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்,
-M.சுரேஷ்குமார்.