மும்மடங்கு வாகனங்களால் மூச்சுத்திணறுது திருப்பூர் மாநகரம்!

திருப்பூரில் உள்ள சாலை வசதி 2 லட்சம் வாகனங்களுக்குத்தான் தாக்குப்பிடிக்கும்; ஆனால், மும்மடங்கு வாகனங்கள் இயங்குகின்றன; மாநகரில் 20 ஆண்டுக்கான வளர்ச்சி அடிப்படையில், போக்குவரத்து வசதி மேம்படுத்த 7,862 கோடி ரூபாய் தேவை” என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகர மக்கள் தொகை 12 லட்சம். கல்வி, மருத்துவம், தொழில், வர்த்தகம், வேலை போன்ற பல்வேறு காரணங்களுக்காக, இங்கு தினமும் 3 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். நகரப் பகுதியில் உள்ள ரோடுகள் 2 லட்சம் வாகனங்களுக்கே தாக்குப்பிடிக்கும்; ஆனால், இதை விட மும்முடங்கு அதிகமாக வாகனப்பயன்பாடு உள்ளது.

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கார்கள், இரு சக்கர வாகனங்கள் போன்ற சொந்த வாகனங்கள்; கல்வி நிலையங்கள், அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்றவை பயன்படுத்தும் தனியார் வாகனங்கள் பெருமளவு இயங்குகின்றன. தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்களின் சரக்கு வாகனங்கள்; சிறிய மற்றும் பெரிய வியாபாரிகள் பயன்படுத்தும் சரக்கு வாகனங்கள்; மார்க்கெட், சந்தை போன்றவற்றுக்கு வந்து செல்லும் சரக்கு வாகனங்கள் அதிகளவில் உள்ளன. இது போன்ற வாகனங்கள் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், நகரில் தற்போது பயன்பாட்டில் உள்ள ரோடுகளில் பெரும் போக்குவரத்து நெருக்கடி, வாகன நெரிசல் பலவிதங்களில் ஏற்படுகிறது.

ரயில், பஸ், மினி பஸ், ேஷர் ஆட்டோ போன்ற பொதுப் போக்குவரத்து வசதிகளை பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர். இது போன்ற பொதுப் போக்குவரத்துகளைப் பயன்படுத்துவோர் தங்கள் இடம் சென்று சேர பெருமளவு நடைபாதைகளைப் பயன்படுத்துகின்றனர்.

போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண, சாலைகள் மேம்படுத்தப்பட வேண்டும்; வாகன பார்க்கிங் வசதி அதிகரிக்க வேண்டும்; பாதசாரிகள் வசதிக்காக நடை மேம்பாலம், நடைபாதைகள், போக்குவரத்து சிக்னல் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்; வாகன நெரிசலை கட்டுப்படுத்த பொதுப் போக்குவரத்து அதிகரித்தல், பஸ் ஸ்டாப்கள் அமைத்தல், பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் அவசியமாகியுள்ளது.

அவ்வகையில் திருப்பூரில் 20 ஆண்டுக்கான வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு விரிவான போக்குவரத்து திட்டம் குறித்த அறிக்கை தயாரிக்க முடிவானது. பொதுமக்களுக்கு வசதியும், பாதுகாப்பும், எளிதான பயன்பாடு மற்றும் நம்பகமான போக்குவரத்து அமைப்பு ஏற்படுத்துவது என்ற அடிப்படையில் இதற்கான அறிக்கை தயாரிக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அவ்வகையில், கடந்த 2021 ஜன., மாதம், ‘எல் அண்ட் டி’ நிறுவனம் 300க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியமர்த்தி இப்பணியைத் துவங்கியது. சுலப மற்றும் நிரந்தர மக்கள் பயண போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து ஆகியவற்றின் அடிப்படையில், நகரில் பல்வேறு முக்கிய ரோடுகள், பல்வேறு கால நேரம், போக்குவரத்து தன்மை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் நீண்ட ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

இதுகுறித்த முதல் ஆலோசனைக் கூட்டம் 2021 ஆக., மாதம்; இரண்டாவது ஆலோசனைக் கூட்டம், ஏப்., மாதம் 2022ல் நடத்தப்பட்டது. கடந்த 2021 செப்., மாதம் வரைவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த ஆலோசனைக் கூட்டங்களில் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டது. அவற்றை ஒட்டியும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுகள், ஆலோசனைக் கூட்ட முடிவுகள் இவற்றின் அடிப்படையில், இந்நிறுவனம் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது. இதில் 2021 முதல் 2041 ம் ஆண்டு வரை 20 ஆண்டுக்கான வளர்ச்சியைக் கணக்கிட்டு அதற்கான போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் திட்டங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

இதில் மாநகராட்சி, இதர பகுதி, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து காவல், அரசு போக்குவரத்து கழகம் ரயில்வே துறை மற்றும் சிறப்பு வாகன மேம்பாடு ஆகிய பிரிவுகளின் கீழ் செய்ய வேண்டிய திட்டப் பணிகள் மற்றும் அதற்கான உத்தேச செலவு, துறைவாரியாகவும், 3 கட்டமாக 2021 -2026 ஆண்டு; 2026-2031 மற்றும் 2031-2041 என்ற அடிப்படையிலும் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.அவ்வகையில், முதல் கட்டத்தில், 3,467 கோடி ரூபாய்; 2வது கட்டத்தில் 793 கோடி ரூபாய் மற்றும் 3வது கட்டத்தில் 3,602 கோடி என மொத்தம் 7,862 கோடி ரூபாய் செலவு ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-பாஷா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp