இது உண்மை தான், வழுக்கை தலையால் வேலை ஒருவருக்கு வேலையே பறிபோயுள்ளது.
பொதுவாக நிறுவனங்கள் ஒரு ஊழியர்கள் சரியாக பணிபுரியவில்லை எனில், அவர்கள் பணி நீக்கம் செய்யப்படலாம். அல்லது மந்த நிலைக்கு மத்தியில் செலவு குறைப்பின் கட்டாயத்தால் பணி நீக்கம் செய்யப்படலாம். ஆனால் ஒருவர் வழுக்கை தலையால் வேலையில் நீக்கப்படலாமா? அப்படி ஒரு நிகழ்வு இருக்குமா? இது ஏற்க கூடியதா? என்ற கேள்வி பலருக்கும் எழும்.
எனினும் வேலை பறிபோனவருக்கு கிடைத்த அதிர்ஷ்டமும் பார்க்க வேண்டிய ஒரு விஷயமாக உள்ளது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ரூ.71 லட்சம் அபராதம்:
வழுக்கை தலையால் வேலை இழந்த நபருக்கு நீதிமன்றம் ஒன்று 71 லட்சம் ரூபாய் கொடுக்க கூறியுள்ளது. இங்கிலாந்தில் நடந்த இந்த பரபர சம்பவம், லிங்கோ நெட்வொர்க்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தில் தான் அரங்கேறியுள்ளது.
வழுக்கை தலையா வேண்டாம்?
இது வழுக்கை தலையுடன் இருக்கும் 50 வயதிற்கு மேற்பட்ட நபர்கள், நிறுவனத்தில் பணியில் இருக்க கூடாது என கூறி அந்த நிறுவனத்தின் மேலாளர் கட்டாயப்படுத்தி வெளியேற்றியுள்ளார். இது அந்த நிறுவன ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் இவ்வாறு கட்டாயமாக வெளியேற்ற ஊழியர்களில் ஒருவரான மார்ஜ் ஜோன்ஸ் என்பவர், இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கினை தொடர்ந்துள்ளார்.
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.