கோவை மாவட்டம் வால்பாறை ஆணைமலை புலிகள் காப்பகம் மானாம்பள்ளி வனச்சரகம் உட்பட்ட பன்னி மேடு எஸ்டேட் பகுதியில் தொழிலாளர்களின் மேற்பார்வையாளராக. டாடா காப்பி முதல். டிவிஷனில் மேற்பார்வையாளராக பணி புரிந்து வந்தவர் புஷ்பராஜ் வயது 54. இவர் வழக்கம் போல் தேயிலை பறிக்கும் தொழிலாளர்களை கண்காணித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராமல். காட்டுப் பகுதியில் மறைந்து இருந்த கரடி தாக்கியதில் வலது காலில் காயம் ஏற்பட்டு அருகிலுள்ள உருளிக்கல் எஸ்டேட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மற்றும் மானாம்பள்ளி வனச்சரகர் அலுவலர் மணிகண்டன் ஆலோசனைக்கு இணங்க கரடி நடமாட்டத்தை மானாம்பள்ளி வனச்சரகர் முத்துமானிக்கம். தலைமையில் மனித வன உயிரின மோதல் தடுப்புக் குழுவினர் கரடியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளார்கள். மற்றும் வனவிலங்கு தாக்குதலை முற்றிலும் ஒழிப்பதற்கான வனத்துறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வால்பாறை அதிகரித்து வரும் வனவிலங்குகளின் தாக்குதலால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.