கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வால்பாறை தேவ அன்பு துணிக்கடை முன்பு நிறுத்திய இருசக்கர வாகனம் காணாமல் போனது. இது பற்றி காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த சூழ்நிலையில் stanmore சந்திப்பு கரும்பாலம் சாலையில் காவல்துறை வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான ஒரு நபர் வந்துண்டிருந்தார். அவரைப் பிடித்து விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக பேசி உள்ளார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
காவல்துறையினர் விசாரணை செய்வதில் வாகனத்திருட்டில் ஈடுபட்ட நபர் என்பது தெறிய வந்தது காணாமல் போன வாகனத்தை திருடிச் சென்ற நபர் முனுசாமி வயது 26 த/பெ. முருகன் சோலையார் மூணாவது டிவிசன் பகுதியில் குடியிருந்து வருகிறார்.
இவர் கடந்த மாதம் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்று உள்ளார். காவல்துறையினரின் வாகன சோதனையில் சிக்கினார் பின்பு வால்பாறை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். வால்பாறை காவல்துறையின் அதிரடி நடவடிக்கையில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட நபர் வசமாக சிக்கினார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
– சி.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.