வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு!!
கோவை கணபதி அருகே உள்ள காந்திமாநகர் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 62). இவருடைய மனைவி ரஞ்சனா (46). நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் மகேந்திரன் வீட்டை பூட்டி விட்டு தைப்பூசத்திற்காக மருதமலை கோவிலுக்கு குடும்பத்துடன் பாதயாத்திரை சென்றார்.நேற்று அதிகாலை 3 மணி அளவில் மகேந்திரன் வீட்டின் அருகில் இருப்பவர்கள் போன் செய்து மகேந்திரனின் வீடு திறந்துள்ளது என்று கூறியுள்ளனர்.
இதனை அடுத்து மருதமலைக்கு பாதயாத்திரை சென்ற மகேந்திரன் தனது குடும்பத்துடன் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருந்தது.வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 20 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து மகேந்திரன் உடனடியாக சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இந்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
-அருண்குமார் கிணத்துக்கடவு.