வீட்டில் கிளி வளர்த்த குற்றத்திற்காக நடிகர் ரோபோ ஷங்கருக்கு 2.5 லட்ச ரூபாய் அபராதம்!!
வீட்டில் கிளி வளர்த்த குற்றத்திற்காக நடிகர் ரோபோ ஷங்கருக்கு மிகப்பெரிய தொகையை அபராதமாக விதித்தது வனத்துறை. மேலும் ஆறுமாத சிறை தண்டனையில் இருந்து தப்பித்தார்
அழிவின் விளிம்பில் உள்ள பறவைகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ள பச்சை கிளியை வீடுகளில் வளர்ப்பதும் விற்பதும் சட்டப்படி குற்றமாகும்.
இது குறித்து எச்சரித்துள்ள வனத்துறை கிளிகள் வளர்ப்பு சட்டப்படி குற்றமாகும் கிளி வளர்ப்பவர்கள் பிடிபட்டால் 6 மாதம் வரை சிறை தண்டனை என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் 2 கிளிகளை வீட்டில் வைத்து வளர்த்ததற்காக நடிகர் ரோபோ ஷங்கருக்கு வனத்துறை 2.5 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இது குறித்து ரோபோ ஷாங்கரின் மனைவி கூறுகையில் கிளிகள் வளர்த்ததற்காக நாங்கள் இப்போது இருக்கும் சூழலுக்கு 2.5 ரூபாய் அபராதம் என்பது அதிகம் இந்தத் தொகையை கட்டுவது கஷ்டம் தான் அதே சமயம் கிளிகளை பணம் கொடுத்து நாங்கள் வாங்கவில்லை கிஃப்டாக வந்தது என தெரிவித்துள்ளார்.
எது எப்படி இருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.
செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.
நாளைய வரலாறு வாசகர்கள் அனைவருக்கும் சர்வதேச தாய்மொழி தின நல்வாழ்த்துக்கள்.