கோவை இராமநாதபுரம் அடுத்த சுங்கம் பகுதியிர் உள்ள, நிர்மலா மகளிர் கல்லூரியில், நிர்மலா கல்லூரி, மற்றும் ரோட்டரி க்ளப் ஆப் கோயம்புத்தூர் கேலக்சி, இணைந்து நடத்திய ‘தேர்வு ‘ குறித்து வெற்றி நிச்சயம் என்ற வழிகாட்டி நிகழ்ச்சி +2 மாணவர்களுக்கு, நேற்று மாலை, கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் தன்னம்பிக்கைப் பேச்சாளர் தனியார் தொலைக்காட்சி புகழ் டாக்டர் ஜெகன் மாணவிகள் மத்தியில் சிறப்புறையாற்றினார், அப்பொழுது மாணவிகள், தேர்வு எழுதுவதற்கு தேவைப்படும் முன் சரிபாக்க வேண்டிய குறிப்புகளை எடுத்துரைத்தார்,
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும், மன அழுத்தம், மறதி போன்ற தேர்வுப் பயங்கள் இல்லாமல் எப்படி தேர்வினை எதிர்கொள்வது என்பது குறித்தும் பல எடுத்துக்காட்டுகளை எடுத்துரைத்து பேசினார், மாணவிகள் தங்களின் படிப்புத்திறனை உயர்த்தவும், அறிவுத்திறனையும், நினைவாற்றலையும் வளர்த்துக்கொள்ளவும் வழி காட்டு நெறிமுறைகளை மாணவிகள் மத்தியில் எடுத்துரைத்தார்.இது தேர்வை எழுதும் மாணவ மாணவியர்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் அளிப்பதாக இருந்தது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவையின் மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.