ஶ்ரீவைகுண்டத்தில் பரபரப்பு!! நீதிமன்றத்தில் வைத்தே பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது!!
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள நல்லூரை சேர்ந்தவர் கருப்பசாமி மகன் நல்லதுரை (25). இவர் குரும்பூர் பகுதியில் பேட்டரி திருடிய வழக்கு விசாரணைக்காக நேற்று முன்தினம் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டுக்கு வந்திருந்தார். அப்போது அவர் கோர்ட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில் விவசாயி ஒருவர் தனது குடும்பத்தை சேர்ந்த பெண்களுடன் வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக வந்தார்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அப்போது அந்த பெண்களுக்கு நல்லதுரை பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை அந்த பெண்களின் குடும்ப உறுப்பினர் ஒருவர் தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த நல்லதுரை அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதை கவனித்த அங்கிருந்த பொதுமக்கள் நல்லதுரையை சுற்றிவளைத்து பிடித்து வைத்துக்கொண்டு ஸ்ரீவைகுண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் அங்கு வந்த இன்ஸ்பெக்டர் அன்னராஜ் மற்றும் போலீசாரிடம் பொதுமக்கள் நல்லதுரையை ஒப்படைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சேவியர் பிராங்கிளின் வழக்குப்பதிவு செய்து நல்லதுரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். கைதான நல்லதுரை மீது பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஶ்ரீவைகுண்டம் நிருபர்
-முத்தரசு கோபி.