இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது 1 நாள் போட்டி : மும்பையில் இன்று நடக்கிறது!!
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு மோதலாக மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.
இன்றைய போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மாவின் நெருங்கிய உறவினருக்கு திருமணம் என்பதால் அவர் இன்றைய போட்டியில் விளையாடவில்லை என்பதும் அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக இந்திய அணியை வழிநடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.
காயத்தால் ஸ்ரேயாஸ் அய்யர் ஒதுங்கி இருப்பதால் சூர்யகுமார் யாதவ் பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
ஆஸ்திரேலிய அணியும், இந்தியாவுக்கு நிகராக பலம் வாய்ந்ததாக விளங்குகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இரு ஆணிகளின் விவரம் பின்வருமாறு;
இந்தியா:- சுப்மன் கில், இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் அல்லது ரஜத் படிதார், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் அல்லது யுஸ்வேந்திர சாஹல் அல்லது வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர், முகமது சிராஜ், முகமது ஷமி அல்லது உம்ரான் மாலிக்.
ஆஸ்திரேலியா:- டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் சுமித் (கேப்டன்), மார்னஸ் லபுஸ்சேன், மிட்செல் மார்ஷ் அல்லது மார்கஸ் ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, சீன் அப்போட் அல்லது நாதன் எலிஸ்.
இன்றைய முதல் போட்டி மும்பையில் மதியம் 1:30 மணிக்கு தொடங்க உள்ளது .
-அருண்குமார் கிணத்துக்கடவு.
கோவை மாவட்டத்தில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள கொரோனா தொற்று!
கோவை மாவட்டத்தில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள கொரோனா தொற்று!