குடிநீர் தட்டுப்பாட்டால் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் பொதுமக்கள் அலட்சியத்துடன் கண்டுகொள்ளாத அதிகாரிகள்!!
கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், கோமங்கலம்புதூர் கிராமத்தில் கடந்த 10 வருடங்களாக குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருவதாகவும் மேலும் இது குறித்து பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் பயனில்லை என்கின்றனர் பொதுமக்கள்.
இது தொடர்பாக பொதுமக்கள் கூறுகையில் எங்கள் பகுதியின் தற்போதை சட்டமன்ற உறுப்பினர் உடுமலை ராதாகிருஷ்ணன் இது குறித்து கண்டுகொள்வது இல்லை அதே சமயம்
அம்பரம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்பாட்டில் உள்ளது, மாதம் ஒரு முறை குடிநீர் வருவதே பெரும்பாடாக உள்ளது இதை எந்த அதிகாரிகளும் கண்டு கொள்ளவது இல்லை பாரத பிரதமர் அவர்களின் புகார் திட்டம் PMcell மற்றும் தமிழக முதல்வர் அவர்களின் CMcell ஆகியவற்றில் புகார்கள் அளித்தால் ஊராட்சியின் கடைக்கோடி கிராமமாக கோமங்கலம்புதூர் உள்ளது அதனால் சரிவர குடிநீர் விநியோகம் செய்ய முடியவில்லை என்று புகாருக்கு பதில் அறிக்கை தருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கிராம ஊராட்சி நிர்வாகமும் இதை கண்டுகொள்வது இல்லை, இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். குடிநீர் இன்றி அடிப்படை தேவையான குடிநீரை விலை குடுத்து வாங்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது, எனவே இதன் மீது மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர் சரியான உரிய நடவடிக்கை எடுத்து கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்
-பொள்ளாச்சி கிழக்கு அருண் பிரசாத்.