NALAIYA VARALARU
குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் வாகன நெரிசல் யார் காரணம்!!!
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட ஜி.எஸ்.டி. சாலையின் குரோம்பேட்டை பகுதியில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் மக்கள் நடமாட்டத்திற்கு சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் இடையூறு ஏற்படுவதாகவும் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.
அந்த வழக்கில் போக்குவரத்து காவல்துறையினர் (#TrafficPolice) தங்களால் இயன்றவரை தினமும் சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு வழக்குப் பதிந்து, அபராதம் விதிக்கப்படுவதாகவும், கடந்த மூன்று மாத காலத்திற்குள் சுமார் 8 லட்சம் ரூபாய் அளவிற்கு அபராத தொகை வசூலிக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதற்கு நீதிபதி, அவரின் பாராட்டையும் தெரிவித்தார். தாம்பரம் மாநகராட்சி தங்கள் வாதத்தில் வாகன நிறுத்த வசதி இல்லாத கட்டிடங்களுக்கு அறிக்கை வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்குப் பின்பும் அவர்கள் வாகன நிறுத்த வசதி ஏற்படுத்தாமல் இருந்தால் அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
சில வியாபார நிறுவனங்கள் தாங்கள் செய்யும் வியாபாரத்திற்கு வாகன நிறுத்தம் தேவை இல்லை என்று குறிப்பிட்டுள்ளதாகவும் இதனை நீதிமன்றத்தில் மாநகராட்சி தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் போக்குவரத்துக் காவல் துறையினர் சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்க வேண்டும் என்று தாம்பரம் மாநகராட்சி சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் முக்கிய விடயம் என்னவென்றால் தாம்பரம் போக்குவரத்து காவல்துறையினர் தங்கள் கடமையினை சீரும் சிறப்புமாக செய்து வருகின்றனர். ஆனால் தாம்பரம் மாநகராட்சியோ தாங்கள் கட்டிட அனுமதி வழங்கிய கட்டிடங்களில் வாகன நிறுத்தங்களை விதி மீறி வர்த்தக/வியாபார இடங்களாக மாற்றிய கட்டிட உரிமையாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் பல காலமாக, மேற்கொள்ளாமல், நீதிமன்றத்தில் அறிவிப்பு (Notice) வழங்கி உள்ளதாக கூறி தங்கள் கடமையை சரிவர செய்யாமலும், சில வியாபாரங்களுக்கு வாகன நிறுத்தம் தேவையில்லை என்று அந்த நிறுவனங்கள் கூறியதாக அவற்றை நீதிமன்றத்தில் தெரிவிப்பது தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு அழகல்ல.
எல்லா வியாபார நிறுவனங்களுக்கும் கட்டாயம் வாகன நிறுத்தம் தேவை, அங்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை எங்கு நிறுத்துவார்கள்? எப்படி இதை போல் ஒரு அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்கள் என்று தெரியவில்லை.
இந்தப் பகுதியில் தற்பொழுது ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு தாம்பரம் மாநகராட்சி முழு பொறுப்பு ஏற்க வேண்டும், மாறாக போக்குவரத்து காவல்துறையினர் மீதும், நெடுஞ்சாலைத்துறையினர் மீதும் பழி சுமத்துவது சரியல்ல. மாநகராட்சி ஆணையர் எல்லா கட்டிடங்களையும் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு வாகன நிறுத்தத்துடன் (Parking Space) கட்டிட அனுமதி பெறப்பட்ட கட்டிடங்களுக்கு, அவற்றை உடனே மாற்றி அமைக்க உத்தரவிட்டு மாற்றி அமைக்காவிட்டால் பூட்டு முத்திரை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மாநகராட்சி அனுமதி பெறாத கட்டிடங்களை, பூட்டு முத்திரை மற்றும் இடிப்பதற்கு அறிக்கை (Lock & Seal, Demolition Notice) வழங்க வேண்டும். பல வழக்குகளில் நீதிமன்றங்கள் கடும் உத்தரவுகளை பிறப்பித்த பின்பும், உள்ளாட்சி அமைப்புகள் அவற்றை கடைபிடிக்காமல் உதாசீனப்படுத்துகிறார்கள்.
மாநகராட்சி ஆணையர் இப் பிரச்சனையை தீவிரமாக எடுத்து, தக்க நடவடிக்கை மேற்கொண்டு, குரோம்பேட்டை பகுதி ஜி.எஸ்.டி. சாலையில் வாகனங்களே நிறுத்தபடாத நிலையை உருவாக்க வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செந்தில் முருகன் சென்னை தெற்கு.