கூட்டாம்புளியில் தனியார் வாட்டர் கம்பெனிகள் சட்ட விதிமீறல்!!!
தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளியில் தனியார் வாட்டார் கம்பெனிகள் சட்ட விதிமீறல் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜகவின் எஸ்.டி அணி பால சந்திரபூபதி மாவட்ட தலைவர் புகார் மனு அளித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் குமாரகிரி ஊராட்சி, கூட்டாம்புளி கிராமத்தில் தனியார் மினரல் வாட்டர் கம்பெனிகள் இருக்கிறது. அதில் SRM என்ற தனியார் வாட்டார் சப்ளையர் கம்பெனி சட்டத்திற்கு புறம்பாக நிலத்தடி நீரை இராட்சத ஆழ்துளைக் கிணறுகள் மூலம் உயர் மின்னழுத்த மோட்டார் மூலம் 24 மணி நேரமும் தண்ணீர உறிஞ்சி விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த கம்பெனி அரசிடம் இருந்து எந்த சான்றிதழ்களும் பொதுப் பணி துறை மற்றும் நிலம் நீர் ஆதார துறையில் தடையில்லா சான்றுகள் பெறவில்லை. ஒர் ஆண்டுக்கு முன்பாக ஊராட்சி தண்ணீர் குழாயிலிருந்து வரும் தண்ணீர் ஒரு வித காரத்தன்மையுடன் வருவதையும், தண்ணீர் திறந்துவிடும் நேரத்தை தவிர வேறு நேரங்களிலும் ஊராட்சி குழாய்களில் தண்ணீர் வருவதையும் அறிந்த அப்பகுதியினர் ஊராட்சி நிர்வாகத்தில் தெரிவித்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதிலிருந்து வெளியான தண்ணீரை பிடித்து பார்த்த ஊராட்சி தலைவர் ஜாக்ஸன், அது ஊராட்சி சார்பில் விநியோகிக்கும் தண்ணீர் இல்லை என்பதை அறிந்தார். உடனே அவர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் தெரிவித்தார். அதிகாரிகள் முன்னிலையில் மினரல் வாட்டர் கம்பெனிகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஒரே இடத்தில் 4 பைப் லைன் இருந்தது. அந்த பைப் லைனிலிருந்து மின் மோட்டார் மூலம் தண்ணீரை உறுஞ்சி எடுத்து வருவதையும், அதே பைப் லைன் மூலமாக கம்பெனியில் உள்ள கழிவு நீரை ஊராட்சி பைப்லைனுக்குள் செலுத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே பைப் லைன்களை கட் செய்த அதிகாரிகள் கம்பெனியை எச்சரித்து சென்றனர்.
மேலும் மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சம்பந்தபட்ட அரசு துறைகள் நடவடிக்கை வேண்டும். அந்த பகுதியில் உள்ள பொதுமக்களின் வாழ்வாதாரத்து வாழ்க்கைக்கும் நிலத்தடி நீர் அடிப்படை அத்தியாவசியாக தேவை படுகிறது. எனவ அரசிடம் இருந்து முறையான தடையில்லா சான்று பெறாத SRM வட்டார் சப்ளையர் கம்பெனி மீது விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் வணிகத்திற்கு விற்பனை செய்யும் குற்றத்திற்கு அவரது ஆழ்துளைக் கிணறுகளை மூடி சீல் வைக்க வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.