கோவை-சென்னை வழித்தடத்தில் விரைவில் வந்தே பாரத் ரெயில் சேவை சேவை 8-ந் தேதி தொடங்குகிறது.
கோவையில் இருந்து சென்னைக்கு தினமும் இண்டர்சிட்டி, கோவை, சதாப்தி, நீலகிரி, சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதுதவிர வாரத்தில் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் இரவில் சென்னைக்கு ரெயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கேரளாவில் இருந்து கோவை வழியாகவும் சென்னைக்கு ரெயில்கள் செல்கின்றன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிலையில் வந்தே பாரத் அதிவிரைவு ரெயில் சேவையை அறிமுகப்படுத்தியது.
இந்த சூழலில் கோவை-சென்னை வழித்தடத்தில் விரைவில் வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது. தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடி இந்த திட்டத்தை தொடங்கி வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
கோவை- சென்னை இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரெயில் 495.28 கிமீ தூரத்தை 6 மணி 10 நிமிடங்களில் சென்றடை யும் என உத்தேசமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. புதன்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாட்களும் இயக்கப்படும் இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
வந்தே பாரத் ரெயில் கோவையில் காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.10 மணிக்கு சென்னை சென்றடையும். சென்னையில் இருந்து பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு கோவை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.வந்தே பாரத் ரெயில் சேவையை கோவை வழித்தடத்திலும் தொடங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பு நிறைவேற உள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
-அருண்குமார், கிணத்துக்கடவு.