கோவை ஆட்சியர் அதிரடி!-அதிகாரிகள் மாற்றம்..!!
கோவை மாவட்டத்தில், ஒரே நாளில், 17 தாசில்தார்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
கோவை கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அலுவலக மேலாளர் ஜெயபால், கலால் துணை கமிஷனர் அலுவலக மேலாளராக மாற்றப்பட்டு இருக்கிறார்.இங்கு பணிபுரிந்த கல்பனா, தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு நிலம் எடுப்பு தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நில எடுப்பு தாசில்தாராக பணியாற்றிய உமாமகேஸ்வரி, பொள்ளாச்சி தனி தாசில்தாராகவும் (முத்திரைகள்), அங்கு பணிபுரிந்த சங்கீதா, பொள்ளாச்சி குடிமை பொருள் தனி தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
கோவை வடக்கு கோட்ட கலால் அலுவலர் விமலா, தெற்கு சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், இவருக்கு பதிலாக இந்து சமய அறநிலையத்துறை நில எடுப்பு பிரிவில் இருந்து சுமதி நியமிக்கப்பட்டிருக்கிறார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மாவட்ட வழங்கல் பிரிவில் பறக்கும் படை தனி தாசில்தாராக இருந்த முத்து, தெற்கு குடிமை பொருள் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர்கள் உட்பட 17 தாசில்தார்கள் மாற்றப்பட்டுள்ளனர்.மாறுதலை தவிர்க்கும் பொருட்டு, விடுப்பில் சென்றாலோ அல்லது பணியில் சேராமல் காலம் தாழ்த்தினாலோ, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் கிராந்திகுமார் எச்சரித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன்.
பொள்ளாச்சி.