NALAIYA VARALARU
சாதனை புரிந்த 25 பெண்களுக்கு சுஷ்மா சுவராஜ் விருது வழங்கப்பட்டது!!
கோவை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 25 பெண்களுக்கு சுஷ்மா சுவராஜ் விருது வழங்கப்பட்டது.
நாடு முழுவதும் சாதனை செய்த பெண்களுக்கு மறைந்த முன்னாள் அமைச்சர் திருமதி சுஷ்மா சுராஜ் பெயரில் விருதுகள் வழங்க வேண்டும் என பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவியும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான திருமதி வானதி சீனிவாசன் அறிவுறுத்தி இருந்தார். அதன் அடிப்படையில் மாவட்டம் தோறும் கட்சி சாராத, சாதனை புரிந்த பெண்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன .
இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு மாவட்ட பாஜக கட்சியில் சார்பில் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களுக்கு சுஷ்மா சுவராஜ் விருது வழங்கும் நிகழ்ச்சி கோவையில் சுந்தராபுரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது.. மருத்துவம் கல்வித்துறை சமூக சேவை, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முத்திரை பதித்த கட்சி சாராத 25 பெண்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சிறப்பு அழைப்பாளராக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி மாநில பொதுச் செயலாளர் முனைவர் மோகனப்பிரியா கலந்து கொண்டார். மாற்றுத்திறன் உடைய குழந்தைகளை பராமரிக்கும் கௌமாரம் ட்ரஸ்டின் நிர்வாக இயக்குனர் திருமதி தீபா மோகன்ராஜ் விருதுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கோவை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் திரு வசந்த ராஜன் மாவட்ட மகளிர் அணி தலைவி திருமதி அருணா உள்ளிட்ட மாநில மாவட்ட மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
-சீனி, போத்தனூர்.