சிங்கம்புணரி செயிண்ட் ஜோசப் மகளிர் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்ற பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்!
தேசிய மகளிர் ஆணையத்தின் வேண்டுகோளுக்கிணங்க நேற்று (28.2.2023) செயிண்ட் ஜோசப் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அழகப்பா பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலின்படி கல்லூரி நிர்வாகம் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் அருட் சகோதரி மார்கரெட் பாஸ்டின் தலைமை தாங்கினார்.
கல்லூரியின் கணிதத்துறை தலைவரும், NSS ஒருங்கிணைப்பாளருமான முனைவர் சுதா வரவேற்புரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் மற்றும் சார்பு நீதிபதி பரமேஸ்வரி, சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலக பாதுகாப்பு அலுவலர் சுதா மற்றும் வழக்கறிஞர் மணிமேகலை ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிகழ்வில் அரசியல், சமயம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மகளிருக்கான உரிமைகளை காத்திடவும், வரதட்சணை, பெண்கள் மீதான வன்கொடுமை, பணிச்சுரண்டல், காவல்நிலையங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டங்கள் பற்றியும், அரசின் உதவிகள் பற்றியும் சிறப்பு விருந்தினர்கள்
உரையாற்றினார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும், மகளிர் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படைச் சட்டங்கள், குடும்ப வன்முறை தடுப்பு சட்டம், திருமணம் மற்றும் ஜீவனாம்சம் தொடர்பான சட்டங்கள் ஆகியவை குறித்து மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் சார்பு நீதிபதி பரமேஸ்வரி, சட்ட விழிப்புணர்வுக்கான சிறு கையேட்டை மாணவிகளுக்கு வழங்கினார். மாணவிகளுக்காக ஒரு நாள் முழுவதும் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இறுதியாக தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஜோதி நன்றியுரையாற்றிய பின் நாட்டுப்பண் பாடப்பட்டு விழா இனிதே நிறைவடைந்தது.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.