சிங்கம்புணரி செயிண்ட் ஜோசப் மகளிர் கல்லூரியில் முதலாம் பட்டமளிப்பு விழா! மாணவிகள் உற்சாகம்!
சிங்கம்புணரியில் உள்ள செயிண்ட் ஜோசப் மகளிர் கல்லூரி கடந்த 2018ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது. சிங்கம்புணரியில் துவக்கப்பட்ட முதல் கல்லூரி இதுவாகும். மேலும், சிங்கம்புணரியில் உள்ள ஒரே பெண்கள் கல்லூரியும் இதுவாகும். இந்தக் கல்லூரியின் முதலாம் பட்டமளிப்பு விழா நேற்று சிறப்புற நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர். அருட்சகோதரி முனைவர் மார்கரெட் பாஸ்டின் வரவேற்புரை ஆற்றினார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ரவி, அனைத்து மாணவிகளுக்கும் பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். எட்டு பாடப் பிரிவுகளின் கீழ் மொத்தம் 184 மாணவிகள் பட்டம் பெற்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இவர்களில் ஐந்து மாணவிகள் பல்கலைக்கழக தரவரிசையில் இடம் பிடித்தவர்கள். இவர்களுக்கு கல்லூரியின் சார்பில் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. 89 மாணவிகள் தனிச்சிறப்புடன் கூடிய முதல் வகுப்பு பெற்றவர்கள். மேலும், இரு மாணவிகள் உயரிய தனிச்சிறப்புடன் கூடிய முதல் வகுப்பில் இடம் பிடித்திருந்தனர். நிகழ்வில் கல்லூரியின் செயலாளர் அருட்சகோதரி முனைவர் சூசைமேரி மற்றும் தலைமை அருட்சகோதரி. ஆரோக்கியம் ஆகியோரும் உரையாற்றினர். மிகவும் நேர்த்தியுடன் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த நிகழ்வில் மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நூற்றுக்கணக்கானோர் மகிழ்வுடன் பங்கேற்றனர். இந்தப் பட்டமளிப்பு விழா ஒரு குடும்ப விழாவினை போன்று அமைந்திருந்தது.
முன்னதாக கல்லூரியின் முன்னாள் மாணவர் நலச்சங்கத்தின் முதல் கூட்டம் பேராசிரியர் கயல்விழி வரவேற்புரை நிகழ்த்த நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வரும், செயலாளரும் சிறப்புரையாற்றினர். முனைவரும், பேராசிரியருமான ஜோதி நன்றியுரை நிகழ்த்தினார்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.