(கோவைப்புதூர் சிபிஎம் கல்லூரி முன்னாள் மாணவ மாணவிகள் சந்தித்து மலரும் நினைவுகளை பகிர்ந்து குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.)
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவையில், கோவைப்புதூர் சிபிஎம் கல்லூரி முன்னாள் மாணவ-மாணவிகள் 27வது ஆண்டில் 3வது முறையாக விஎல்பி கல்லூரி எதிரே உள்ள குமரன் மகாலில் சந்தித்து, 38 யூனிட் ரத்த தானம் செய்தும், 12 மரக்கன்று நட்டும் நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சிபிஎம் கல்லூரியில் கடந்த 1993-96 ம் ஆண்டுகளில் 7 துறைகளில் படித்த முன்னாள் மாணவ-மாணவிகள் சந்திப்பு விழா குமரன் மஹாலில் நடந்தது.
(மார்ச் 8 மகளிர் தினத்தை முன்னிட்டு எடுக்கப்பட்ட சிறப்பு குழு புகைப்படத்தில் முன்னாள் மாணவிகள்.)
இவ்விழாவை நினைவுகூரும் வகையில், முன்னதாக கோவைப்புதூர், தமிழ்நாடு சிறப்பு காவல் படை வளாகத்தை ஒட்டிய சாலையில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் 1,170 மரக்கன்றுகளை இதுவரை நட்ட சுற்றுச்சூழல் ஆர்வலரும், வணிகவியல் துறை முன்னாள் மாணவருமான ரகு மற்றும் நண்பர்கள் குழுவினர், 12 மரக்கன்றுகளை நட்டார்.
(சுற்றுச்சூழல் விழிப்புணர் ஏற்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் நட்ட முன்னாள் மாணவ-மாணவிகள்.)
இதைத்தொடர்ந்து குமரன் மஹாலில் ரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. முகாமை தமிழ்நாடு சிறப்பு காவல்படை உதவி கமாண்டன்ட் குமார், நல்லறம் அறக்கட்டளை தலைவர் அன்பரசன், தலைமை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். டீன் நிர்மலா தேவி, ரத்த வங்கி தலைவர் மங்கையர்க்கரசி அறிவுறுத்துதல் படி, கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி உதவி பேராசிரியர் செந்தில் மேற்பார்வையில் 38 பேரிடம் 38 யூனிட் ரத்தம் நன்கொடையாக பெற்றனர்.
(சிபிஎம் கல்லூரி 1993-96 பேட்ச் இளங்கலை வரலாறு மாணவ-மாணவிகள்.)
மேலும் இலவசமாக பிரசர், ஹீமோகுளோபின் அளவு பரிசோதனை, ஆலோசனை வழங்கப்பட்டது. மகளிர் தினத்தை முன்னிட்டு கல்லூரி முன்னாள் கணிதவியல் துறை மாணவி கீதாலட்சுமி விழிப்புணர்வு உரையாற்றினார்.
(நல்லறம் அறக்கட்டளை தலைவர் அன்பரசன் மற்றும் சிபிஎம் கல்லூரி முன்னாள் மாணவர்கள்.)
சிபிஎம் கல்லூரியின் 1993-96 ம் ஆண்டு பேட்ச் முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி கடந்த 2011 ம் ஆண்டு சிபிஎம் கல்லூரியில் முதல் முறையாகவும், 2016ம் ஆண்டு கே.என்.ஜி புதூர் தனியார் மண்டபத்தில் 2வது முறையாகவும், தற்போது 2023ம் ஆண்டு 3வது முறையாகவும் நடத்தப்பட்டதாகவும் ரத்ததான சேவை, உறுப்பினர் சேர்க்கையை அதிகரித்து ஏழை எளிய மாணவர்களுக்கு,
விளம்பரம். (உங்களுடைய விளம்பரமும் இதழில் வெளிவர தொடர்பு கொள்ளவும்.)
கல்வி உதவித்தொகை உள்ளிட்ட உதவிகள் அதிகளவில் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் சிபிஎம் நண்பர்கள் அறக்கட்டளை தலைவர் கலைச்செல்வன், துணை தலைவர் வித்யபிரகாஷ், செயலாளர் காளிதாஸ், பொருளாளர் சுனில்குமார், உதவி பொருளாளர் வெங்கடேசன், உதவி செயலாளர் முருகவேல், டிரஷ்டி நிசார் அகமது ஆகியோர் தெரிவித்தனர். தொடர்ந்து, தலைவர் கலைச்செல்வன் ஆண்டறிக்கை வாசித்தார்.
(சிபிஎம் கல்லூரி முன்னாள் புள்ளியியல் துறை மாணவி உஷா பிரியாவின் தங்கை ஹேமா மகன் அர்விந்த் முதல் முறையாக ரத்த தானம் செய்து பாராட்டு பெற்றார். அருகில் ரத்த கொடை வழங்கிய முன்னாள் தமிழ் மன்ற தலைவர் ஆர்.கே விக்கிரமபூபதி.)
மேலும் முன்னாள் மாணவர் பேரவை தலைவர் பிரகாஷ், முன்னாள் தமிழ் மன்ற தலைவர் விக்கிரம பூபதி உள்ளிட்டோர் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். சிபிஎம் நண்பர்கள் அறக்கட்டளை 4 ம் ஆண்டு நிகழ்வை முன்னிட்டும ரத்த தான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முன்னாள் மாணவர் ஸ்ரீ ராமின் மகள் வர்ஷினி, சந்திப்பு நிகழ்வை வெளிப்படுத்தும் வகையில் “இளங்காத்து வீசுதே” பாடலை புகைப்பட தொகுப்புடன் பாடியதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
(கோவைப்புதூர் சிபிஎம் கல்லூரி முன்னாள் முதல்வர் முனைவர் திரு.டி.எம் முத்துராஜ் அவர்களுடன் கல்லூரி தமிழ்மன்ற முன்னாள் தலைவர் ஆர் கே விக்கிரம பூபதி.)
முடிவில், ரத்த தான முகாமை நடத்திய கோவை அரசு மருத்துவமனை ரத்த வங்கி குழுவினருக்கும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும், துறை முன்னாள் மாணவ பிரதிநிதிகளுமான அருள்குமார், அப்பாஸ் அலி, மன்சூர், சண்முகசுந்தரம், கல்பனா, தாரா செந்தில் குமார், உஷா நந்தினி ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இதுவரை 50 முறை ரத்த தானம் செய்த முன்னாள் வணிகவியல் துறை மாணவர் பாலகிருஷ்ணன் கௌரவிக்கப்பட்டார். முன்னாள் மாணவி உஷா பிரியாவின் தங்கை ஹேமா மகன் அர்விந்த் முதல்முறையாக ரத்ததானம் செய்ததற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. முன்னாள் மாணவி லீனா மகள் நந்தித்தா நிகழ்ச்சிகளை சிறப்பாக தொகுத்து வழங்கினார். புகைப்படங்கள், வீடியோக்களை கோவை ஆர்.எஸ் புரம் சுதிர் போட்டோகிராபி புகைப்படக்கலைஞர் சுதிர் ஒருங்கிணைத்தார்.
(மகளிர் தினம் குறித்து முன்னாள் கணிதவியல் துறை மாணவியும் மக்கள் நீதிமய்ய நிர்வாகியுமான கீதாலட்சுமி பேசினார்.)