சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 24.06.2015 அன்று பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் செய்துங்கநல்லூர் ஏ.கோவில்பத்து பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் கண்ணன் (43) என்பவரை செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கை அப்போதைய செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜசுந்தர் புலன் விசாரணை செய்து கடந்த 30.03.2016 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய நீதிபதி சுவாமிநாதன் இன்று (17.03.2023) குற்றவாளியான கண்ணனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜசுந்தர், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலெட்சுமி மற்றும் விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை காவலர் செல்வக்குமார் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் மகேஸ்வரி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பாராட்டினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஶ்ரீவைகுண்டம் நிருபர்
-முத்தரசு கோபி