தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பக்தர்கள் காணிக்கையாக வழங்குவார்கள் அந்த
கோவிலுக்கு சொந்தமான மாடுகளை வழங்க வேண்டும் என சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக திருச்செந்தூர் தாலுகா, மேல திருச்செந்தூர் ஊராட்சியைச் சேர்ந்த பெண்கள் கூட்டமைப்பினர், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர் அந்த மனுவில், எங்கள் குழு கூட்டமைப்பில் 23 மகளிர் குழுக்கள் உள்ளன. அனைவரும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள். ஏழ்மை நிலையில் உள்னனர். அவர்களது வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சொந்தமான மாடுகளை மகளிர் குழு உறுப்பினர்களுக்கு வழங்க அறங்காவலர் குழுவுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஒட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.