NALAIYA VARALARU
தென்மாவட்ட சிலம்பம் சாம்பியன்ஸ் போட்டிகள் !!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்ட மன்ற தொகுதி நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து தென்மாவட்ட அளவிலான சிலம்பம் சாம்பியன்ஸ் போட்டிகள் நடைபெற்று.
நாகலாபுரம் SSS சிலம்பம் பயிற்சி பள்ளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இனைந்து நடத்திய தென்மாவட்ட அளவிலான சிலம்பம் சாம்பியன்ஸ் போட்டிக்கு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தென்காசி ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து 200 க்கு மேற்பட்ட சிலம்பம் வீரர்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சிலம்பம் என்பது தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டுஆகும். சிலம்பாட்டத்தைக் கற்றுக் கொள்ளக் குறைந்தது ஆறு மாதக் காலம் தேவை. இதற்கென சிலம்பாட்டக் கழகங்கள் பல தமிழகத்தில் உள்ளன.
சிலம்பாட்டம் ஆடுவதற்குக் குறைந்தது இருவர் வேண்டும். நன்கு பயிற்சி பெற்ற ஆட்டக்காரர்களே சிலம்பாட்டப் போட்டிகளில் விளையாடுவர், தற்காலத்தில் ஆண்கள், பெண்கள் என்று இருபாலரும் சிலம்பாட்டத்தைக் கற்று விளையாடி வருகின்றனர். திருவிழா, கோயில் விழாக்கள், மற்றும் ஊர்வலங்களில் சிலம்பாட்டம் தவறாது இடம் பெறும். இக்கலை திருவள்ளூர் , திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெருமளவு நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் இராமலிங்கம் நாகலாபுரம் அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் , உலகம்மாள் முனியசாமி ஊராட்சி மன்ற தலைவி நாகலாபுரம், பரிசுகள் வழங்கியர் கண்ணன் HP பெட்ரோல் பங்க் நாகலாபுரம் ,SSS பயிற்சி ஆசிரியர் சிவலிங்கம் மற்றும் sss பயிற்சி பள்ளி பொருளாளர் சிவ செல்வம் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.