NALAIYA VARALARU
நாட்டு நலப் பணித் திட்டம் சிறப்பு முகாம்!!!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்ட மன்ற தொகுதி நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்தும் நாட்டு நலப்பணித் திட்டம் சிறப்பு முகாம் அயன்ராஜாப்பட்டி கிராமத்தில் 7 நாட்கள் நடைபெறுகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட 50 கல்லூரி மாணவ, மாணவியர்கள் கிராம வளர்ச்சி, கிராமப்புற தூய்மை, அரசு திட்டங்கள் விளக்கம் ,பெண்கள் முன்னேற்றம், மரம் வளர்ப்போம், கிராமிய விளையாட்டு போட்டிகள் ஆகியவை நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் சமூக சேவை மூலம் ஆளுமையை வளர்ப்பதே ஆகும். இந்த திட்டம் மாணவர்களுக்கு சமூக நல எண்ணங்களை கற்பிக்கவும்,எந்தவித பாரபட்சமும் இல்லாமல் சமூகத்திற்கு சேவை செய்வதற்கும் அமைக்கப்பட்டது.
மத்திய மாநில அரசுகள் நிதிஉதவியுடன் செயல்படுத்தப்படும் நாட்டு நலப் பணித் திட்டம், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு வாழ்க்கையை கற்றுக்கொடுக்கும் வாழ்வியல் திட்டம் என்றால் மிகையாகாது. ஆசிரியர்,பாடப் புத்தகங்கள், கரும்பலகை, தேர்வு, வகுப்பறை இப்படித்தான் மாணவர்களின் கல்விப் பயணம் பயணிக்கிறது.
தனக்காக இல்லாமல் பிறருக்காக முடிந்ததை செய்ய வேண்டும்’ என்ற கருத்தை இத்திட்டம் முன்மொழிகிறது. …
இந்த சிறப்பு முகாமில் பேராசிரியர் முனைவர் இரா சந்தகுமாரி முன்னாள் அரசு கல்லூரி முதல்வர், பேராசிரியர் பழனிக்குமார் MKN கல்லூரி சில்லாங்குளம், ஜமுனராணி அயன்ராஜப்பட்டி ஊராட்சி மன்ற தலைவி, பேராசிரியர் முனைவர் செ.சுரேஷ்பாண்டி திட்ட அலுவலர் நாட்டு நலப் பணித்திட்டம், முனைவர் இராமலிங்கம் கல்லூரி முதல்வர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.