NALAIYA VARALARU
பொது அறிவு சுடரை ஏற்றி வைக்கும் ஆசிரியப் பெருமக்கள்!
இளம் வயதிலேயே நாட்டு நடப்பை தெரிந்து கொள்ள வைக்கும் அற்புதம்!!
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அமைந்துள்ளது தூய இருதய மகளிர் தொடக்கப்பள்ளி. இங்கு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆன குழந்தைகள் படித்து வருகிறார்கள். இங்கு படிக்கும் குழந்தைகள் பாடப்புத்தகத்தில் இருக்கும் படிப்பை மட்டும் படித்தால் பத்தாது நாட்டு நடப்பு, பொது அறிவு ஆகியவற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரிய பெருமக்கள் தமிழகத்தில் வெளியாகி கொண்டிருக்கும் அனைத்து செய்தித்தாள்களின் பிரதிகளை வாங்கி பள்ளியில் வைத்துள்ளனர்.
இந்த செய்தித்தாள்களை அனைத்து வகுப்பு மாணவிகளையும் அவர்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் படிக்கச் சொல்லி அறிவுறுத்தி உள்ளனர். இந்த செய்தித்தாள்களில் வரும் செய்திகளை படிக்கும் மாணவிகள் மதிய இடைவேளையின் போது தாங்கள் படிக்கும் செய்திகள் பற்றிய விபரங்களை மற்ற மாணவியருக்கும் ஒலிபெருக்கி மூலம் தெரிவிக்கிறார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால் அங்கு பயிலும் மாணவியர்கள் ஆர்வத்துடன் செய்திகளைப் படித்து மற்றவர்களுக்கு பகிர்கின்றனர். மாணவியர் தங்களுக்குள் இதுபோன்று கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் பொழுது பொது அறிவு மற்றும் நாட்டு நடப்புகளை எளிதாக புரிந்து கொள்வார்கள்.
பள்ளிப் பாடங்களுடன் இதுபோன்று பொது அறிவுகளையும் அன்றாடம் நாட்டில் நடக்கும் பலவிதமான விஷயங்களையும் மாணவிகள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரிய பெருமக்கள் அனைவரும் போற்றுதலுக்குரியவர்களே!
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.