வால்பாறையில் பெய்த மழையால் படகு இல்லாம் நீர் நிரம்பி உபரிநீர் வெளியேற்றம்!
கோவை மாவட்டம் வால்பாறை இயற்கை எழில் நிறைந்த ஒரு சுற்றுலாத்தலமாகும். இந்தக் கொள்ளை அழகை ரசித்துச் செல்ல ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள்.
இதனால் வால்பாறை நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளிலேயே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.இந்த சூழ்நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகைக்கு ஏற்ப சாலை வசதிகள் மற்றும் வாகனம் நிறுத்தும் இடங்கள் சுற்றுலா பயணிகள் பொழுது போக்குக்காக செல்லும் இடங்களை சீர்படுத்துதல் ஆகியவற்றை சிறப்பாக செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர் வால்பாறையில் உள்ள படகு இல்லம் இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு சரியாக வராத நிலையில் உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து கொண்டிருந்தது ஆனால் இரண்டு நாட்களாக வால்பாறையில் கோடை வெப்பத்தை போக்கும் வகையில் மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று பெய்த கனமழையின் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கும் வால்பாறை மக்களுக்கும் பயன்படாத படகு இல்லம் நீர் நிறைந்து உபரி நீர் வெளியேறியது.இந்த உபரி நீரானது அருகில் செல்லும் ஸ்டான் மோர் ஆற்றில் கலந்து சென்றது.
இந்த மழையினால் கோடையின் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுவதாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.