வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் எழுப்ப பொதுமக்கள் கோரிக்கை!!!
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட வால்பாறை அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது.இந்த மருத்துவமனைக்கு வால்பாறை நகரை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதியிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
இந்த சூழ்நிலையில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மருத்துவமனைக்குள் சென்று வைத்தியம் பார்க்க முடியாத அளவுக்கு மருத்துவமனை வளாகத்திற்குள் புற்களை மேய்ந்து கொண்டிருக்கும் கால்நடைகளால் இடையூறு ஏற்பட்டுள்ளது. நோயாளிகள் சென்று வரும் மருத்துவமனை வளாகப் பகுதிக்குள் கால்நடைகள் புகுந்து புற்களை மேய்வதால் எங்கே நம்மை தாக்கி விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் பயந்து செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் கால்நடைகள் புல்களை மேய்ந்து இருக்கும் காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் நோயாளிகள் ரத்தப் பரிசோதனை நிலையத்திற்கு செல்லும் அருகில் நின்றதால் நோயாளிகள் பயத்துடன் திரும்பி வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் அரசு மருத்துவமனை வளாகத்தை சுற்றி பாதுகாப்பு சுவர் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடை மற்றும் சில சமயங்களில் வனவிலங்குகள் மருத்துவமனை பகுதிக்கு வராமல் இருப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.