அம்பேத்கரின் 132வது பிறந்தநாளை முன்னிட்டு , தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்கள்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. அவர்கள் தலைமையில் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நகர செயலாளர் விஜய பாண்டியன் , ஒன்றிய செயலாளர்கள் , பேரூராட்சி செயலாளர்கள், பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டார்.
ஒட்டப்பிடாரம்:
திமுக சார்பில் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் திரு.எல்.ரமேஷ் அவர்கள் ஒட்டப்பிடாரம் யூனியன் அலுவலத்தில் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கொடியன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அருண்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஒட்டப்பிடாரம் வழக்கறிஞர்:
ஒட்டப்பிடாரம் மெயின் பஜாரில் அலங்கரிக்கப்பட்ட அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வீரன் சுந்தரலிங்கனார் பேரவை தலைவர் முருகன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.