தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் வண்டல்மண், கரம்பை மண் அள்ள அனுமதி பெறுவதற்கான சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஒட்டப்பிடாரம் வட்டத்தில் உள்ள வேடநத்தம் மற்றும் வள்ளிநாயகிபுரம் ஆகிய பகுதிகள் ஒட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவபாலன் கலந்து கொண்டு விவசாயிகள் இருந்து மனுக்கள் பெற்றுக் கொண்டார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 564 குளங்கள், கண்மாய்கள், ஏரிகள், நீர்த்தேக்கங்களில் விவசாய பயன்பாட்டுக்காக விவசாயிகள் வண்டல் மற்றும் கரம்பை மண் அள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் விவசாயிகளின் நலன் கருதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் பஞ்சாயத்து தலைவர் தலைமையில் வருவாய்த்துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பங்கேற்கும் சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. வண்டல் மண் மற்றும் கரம்பைமண் பெற விவசாயிகள் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டனர்.
முகாமில் தங்கள் பெயரில் அல்லது விவசாயம் செய்பவரின் பெயரில் உள்ள கிராம கணக்குகளின்படி நிலங்கள் உள்ளது என்பதற்கான ஆதாராக கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து சான்றிதழ் பெற்று வழங்கப்பட்டது . தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகளின்படி தூத்துக்குடி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை மூலம் மண் பரிசோதனை அறிக்கை பெற்று, அதன்அடிப்படையில் டிராக்டர் மூலம் பகல் நேரத்தில் மட்டும் வண்டல், கரம்பை மண் எடுத்துக் கொள்ளலாம்.
விவசாயிகள் மாவட்ட ஆட்சியர்க்கு கோரிக்கை:
விவசாயிகளிடம் பெறப்படும் மனுக்கள் வட்டாச்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் மூலமாக மண் பரிசோதனை மையத்திற்கு அனுப்பிவைக்கப்படுகிறது. பின்னர் மண் பரிசோதனை மையம் பரிந்துரைக்கு சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை சார்பில் அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்ன்ற கெடுபிடி விதிமுறைைகளால் சாமானிய விவசாயிகள் கரம்பை மண் அள்ள முடியாது.
இதே நடைமுறை கடந்தாண்டும் அரசு பின்பற்றியதால் விவசாயிகளால் கரம்பை அள்ள முடியவில்லை.இதனால் அரசு அறிவிப்பு வெறும் காணல் நீராகிவிடும் சூழ்நிலை உள்ளது. எனவே விதிமுறைகளை தளர்த்தி எளிய முறையில் வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டாட்சியர் பரிந்துரை அடிப்படையில் கரம்பை மண் அள்ள அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் கெட்டு கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.