NALAIYA VARALARU
ஒட்டப்பிடாரம் அருகே கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்!!
காட்டுநாயக்கன்பட்டி வடக்கு தெரு பகுதியை சார்ந்த சக்திவேல் வயது 62, டிரைவர் தந்தை பெயர் பொன்னுசாமி. நேற்று மாலை கோவில்பட்டியிலிருந்து தூத்துக்குடி செல்லும் பொழுது ஒட்டப்பிடாரம் அருகில் முப்பிலிவெட்டி வரும் பொழுது தூக்க கலக்கத்தில் டிரைவர் நிலை தடுமாறி சாலையில் வலது பக்கம் உள்ள பக்கவாட்டில் இருந்த இரும்பு தடுப்பின் மீது மோதியதில் வாகனம் தலைகுப்பற கவிழ்ந்தது. டிரைவருக்கு எவ்வித காயமும் இல்லை லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கார் விபத்து பற்றிய தகவல் அறிந்த உடனே தனி வட்டாட்சியர் செல்வகுமார், ஒட்டப்பிடாரம் கிராம நிர்வாக அலுவலர் வருவாய் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இவ்விபத்துக் குறித்த தகவலறிந்த ஒட்டப்பிடாரம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.