NALAIYA VARALARU
ஒட்டப்பிடாரம் சிவன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் !!!
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சிவன் கோவில், அகிலாண்டேஸ்வரி, விஸ்வநாதர் சுவாமி கோவில்களில் நேற்று சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஒட்டப்பிடாரம் அருள் தரும் அகிலாண்டேஸ்வரி, விஸ்வநாதர் சுவாமி திருக்கோயில் கோவில் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா விமர்சையாக நடைபெறும்.
இந்த ஆண்டு சித்திரை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தொடர்ந்து சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரம் அருகில் சுவாமி -அம்பாள் எழுந்தருள பூஜைகள் நடைபெற்றது. அங்கு கொடிமரத்திற்கு பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு கொடி ஏற்றப்பட்டது. பிறகு கொடி மரம், சுவாமி -அம்பாளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 03 தேதி (புதன்கிழமை ) காலை 9.30 முதல் நடைபெறுகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஓட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.