தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் உலகாண்ட ஈஸ்வரி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரி ஊர்வலத்துடன் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர்.
ஓட்டப்பிடாரம் உலகாண்ட ஈஸ்வரி அம்பாள் கோயிலில் பங்குனி திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் கடைசி செவ்வாய்கிழமை நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா துவங்கியது.
அன்று மாலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதிகாலை முதல் இரவு வரை அம்மனுக்கு பல்லாயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தது. மேலும் ஓட்டப்பிடாரம் சித்தி விநாயகர் மற்றும் வடக்குப்பரும்பூர் விநாயகர் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மன் சன்னதிக்கு சென்றனர்.
பின்னர் சிறப்பு பூஜைகளும், அம்மனுக்கு உச்சிகால பூஜையும் நடந்தது. இரவு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனைகளும் நடந்தது. நள்ளிரவு
அம்மன் திருத்தேர் சப்பரத்தில் நகர்வலம் செல்லும் வைபவம் நடந்தது. காலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், பின்னர் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துதல் நிகழ்ச்சி நடந்தது.
கொடை விழாவினையொட்டி கரகாட்டம், வில்லிசை கச்சேரி, காபடி பேட்டி போன்றவை நடந்தது. விழாவில் ஓட்டப்பிடாரம் சுற்றுவட்டார பொதுமக்கள் பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஒட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.