கேரள அரசிற்கு எதிரான அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம்! தலைவர்கள் பங்கேற்பு!
அட்டப்பாடியில் சித்தூர் சாலையில் கூலிக்கடவு என்ற இடத்தில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு தடுப்பணை கட்டியுள்ளது.
இது கோவை மாவட்டத்திற்கு குடிநீருக்கும்,விவசாயத்திற்கும் பயன்படும் பில்லூர் அணைக்கு வரும் தண்ணீரை தடுத்து நிறுத்தும். ஏற்கனவே சிறுவாணி அணையில் பெரும் மழை பெய்யும் போதும் 50 அடி உயரமுள்ள அணையில் 45 அடிக்கு மேல் நிரப்ப கேரளா அரசு அனுமதிப்பதில்லை. சிறுவாணி அணையை பராமரிக்க கேரளா அரசுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்குகிறது. ஆனாலும் சிறுவாணி அணைக்கு சாடிவயல் வழியாக செல்லும் பாதையை சீரமைக்காமல், தமிழ்நாடு குடிநீர் வடிகால வாரிய அதிகாரிகள் ஆய்வுக்கு கூட சிறுவாணி அணைக்கு சாடிவயல் வழியாக செல்ல முடியாமல் ஆணைக்கட்டி வழியாக சுற்றி செல்லக்கூடிய அவல நிலை உள்ளது. இந்நிலையில் மீண்டும் ஒரு தடுப்பணை என்பது தமிழர்களை வஞ்சிக்கும் செயலே ஆகும்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
எனவே சிறுவாணி ஆற்றில் தடுப்பணை கட்டும் கேரளா அரசை கண்டித்து (26-04-23) புதன்கிழமை காலை கோவை காந்திபுரம் அரசு விரைவு பேருந்து நிலையத்தில் கேரளா அரசு போக்குவரத்து பேருந்து முற்றுகை போராட்டம் தந்தை பெரியார் திராவிடர் கழகம் மாநில பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டினன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கேரளா அரசு பேருந்து முற்றுகை போராட்டத்தில் அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். கலந்துகொண்டவர்களை காவல்துறையினர்
கைது செய்து மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்!!!
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.