NALAIYA VARALARU
கோவை வெள்ளலூர் அரசு பள்ளியில் மாநகர காவல் ஆணையாளர் கோடைகால சிறப்பு பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்..!!
கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். தற்பொழுது பள்ளி மாணவ மாணவிகளுக்கு தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விட தொடங்கி உள்ளனர்.இந்த கோடை விடுமுறையை மாணவ மாணவிகள் தங்களது திறனை வளர்த்த பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் வெள்ளளூர் அரசு மேல்நிலைப் பள்ளியுடன் வாக்கரூ நிறுவனத்தினர் இணைந்து கோடைகால சிறப்பு பயிற்சி முகாமை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.இந்த கோடைகால சிறப்பு பயிற்சி முகாமில் மாணவ மாணவியரின் விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு வகையான சிறப்புமிக்க வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.இந்தக் கோடைகால சிறப்பு வகுப்புகள் முகாமை தொடங்கி வைக்க கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் திரு. பாலகிருஷ்ணன் அவர்களும் வாக்கரூ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் நிர்வாக அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் பள்ளியின் தலைமை ஆசிரியரும் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி கோடைகால சிறப்பு பயிற்சி முகாமை தொடங்கி வைத்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர ஆணையாளர் அவர்கள் பள்ளி மாணவ மாணவியருக்கு சிறப்பான அறிவுரைகளை வழங்கி வாழ்க்கையில் எவ்வாறு முன்னேற்றமான பாதையை அடைய வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.போதைப் பொருட்களினாள் ஏற்படும் தீமைகள் புத்தகம் படிப்பதினால் ஏற்படும் நன்மைகள் பற்றி கூறினார் முதல் மதிப்பெண் எடுப்பவர்களை விமானத்தில் அழைத்துச் செல்லவும் ஏற்பாடு செய்வதாகவும் கூறினார்.
நமது வெள்ளலூர் பள்ளியில் இருந்து மாணவ மாணவிகளை அழைத்துச் செல்ல ஒரு விமானத்தையே புக் செய்யும் நிலையை ஏற்படுத்தும் அளவுக்கு அனைத்து மாணவர்களும் மிகச்சிறந்த மதிப்பெண்களை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள் இந்த கோடைகால சிறப்பு பயிற்சிகள் முகாமை பற்றி கூறும் பொழுது தனியார் பள்ளிகளுக்கு இணையாக தற்பொழுது அரசு பள்ளியிலும் கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் தொடங்கப்பட்டுள்ளது என்றும் மாணவர்களின் நலனுக்காக வாக்கரூ நிறுவனத்தினருடன் இணைந்து அவர்களின் உதவியோடு இந்த கோடைகால பயிற்சி முகாம் தொடங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.தனியார் பள்ளிகளில் இதற்கென தனித்தனி கட்டணத்துடன் கோடைகால சிறப்பு பயிற்சி முகாம்கள் நடத்தப்படுவதாக கூறினார்.
மேலும் பள்ளியின் சிறப்பு ஆசிரியர் அவர்கள் பேசும் பொழுது,நமது பள்ளிக்கு கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் துணைை ஆணையாளர் காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் வாக்கரூ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் அதன் தலைமை செயல் அதிகாரிகளும் அவர்களுக்கான வேலையை விட்டுவிட்டு நமக்காக அவர்களுடைய நேரத்தை ஒதுக்கி இங்கு வந்துள்ளார்கள் நம்முடைய மாணவர்கள் ஒழுக்கத்தில் சிறந்து விளங்க வேண்டும் அவர்கள் மேன்மையான நிலையை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இங்கு வந்துள்ளார்கள் அவர்களின் அறிவுரையை ஏற்று நடந்தாலே நாம் வாழ்க்கையில் சிறப்பான நிலையை அடைய முடியும் என்று கூறினார்
வாக்கரூ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அவர்கள் இது பற்றி கூறும்பொழுது இந்தப் பள்ளியைப் போன்றே கிராம பகுதியில் உள்ள பள்ளிகளுக்கும் நாங்கள் இதே போன்று
உறுதுணையாக இருந்து மாணவர்களின் எதிர்காலத்திற்கு தேவையான இது போன்ற கோடைகால சிறப்பு பயிற்சி முகாம்களை நடத்துவதற்கு தேவையான உதவிகளை செய்து வருவதாக தெரிவித்தார்.
கோடைகால சிறப்பு பயிற்சி முகாமை நடத்துவதற்கு தேவையான வகுப்பறைகள் தயார் செய்து வைக்கப்பட்டிருந்தன அதனை நமது கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் அவர்கள் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக.
-ஈசா. C.ராஜேந்திரன்.