நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ குமரி மாவட்ட ஏ.ஐ.டி.யு.சியின் சார்பில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றபட்ட 8மணி நேர உழைப்பை 12மணி நேரமாக அதிகரிப்பதுடன் தொழிலாளர் சமூக நல திட்டங்களை இரத்து செய்ய வழி வகை செய்யும் தொழிலாளர் விரோத சட்ட திருத்தம் 65Aவை இரத்து செய்ய வலியுறுத்தி கோரிக்கை ஆர்பாட்டம் நடைபெற்றது.
இவ் ஆர்பாட்டத்திர்க்கு குமரி மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட தலைவர் தோழர் எஸ் அனில்குமார் தலைமை தாங்கினார்.ஏ.ஐ.டி.யு.சியின் குமரி மாவட்ட செயலாளர் தோழர் ஜி.சுரேஷ் மேசியதாஸ் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி அனைத்திந்திய முற்போக்கு பேரவையின் மாநில துணைத் தலைவர் தோழர் பேராசிரியர் சுந்தரம் ,அரசுப்பணியாளர் சங்க மாநிலத்தலைவர் சந்திரசேகர் ,
மாவட்டச் செயலாளர் தனசேகர், பொதுசுமைதூக்கும் தொழிலாளர் சங்க மாவட்ட பொறுப்பாளர் கல்யாண சுந்தரம், அரசு விரைவு போக்குவரத்து கழக ஏ.ஐ.டி.யு.சி பொறுப்பாளர் சுப்பையா சூரிய குமார், ஆஷா பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் தோழியர் உஷா ,ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.இறுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் தா.சுபாஷ் சந்திர போஸ் ஆர்ப்பாட்ட போராட்டத்தை முடித்து வைத்தார்.
ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணை செயலாளர் தோழர் எஸ்.நாராயணசாமி, ஏ.ஐ.டி.யு.சி காளிமுத்து, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர்கள் தோழர் வி.அருணாசலம், மஞ்சாலுமூடு மரியதாஸ், இந்திய மாதர் தேசிய சம்மேளன அமைப்பாளர் ஆர்.செல்வராணி,
பொறுப்பாளர் கஸ்தூரி, வெள்ளிமலை பஞ்சாயத்து உறுப்பினர் சுதாமதன் கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட துணைத்தலைவர் தோழர் பகவதி, ஓய்வுபெற்ற அலுவலர் சங்க பொறுப்பாளர் அசோகன் உட்பட திரளான தோழர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.