NALAIYA VARALARU
சத்துணவு ஊழியர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் !!!
தூத்துக்குடி சிதம்பரம் நகர் பேருந்து நிறுத்தம் அருகே சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வருவாய் கிராம ஊழியருக்கு இணையாக மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ.6,750 அகவிலைப்படியுடன் சேர்த்து வழங்க வேண்டும். அரசுத்துறை காலிப்பணியிடங்களில் தகுதியுள்ள சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு திட்டத்துடன் இணைத்து, சத்துணவு ஊழியர்களைக் கொண்டே செயல்படுத்திட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சொ.ஜெகவீரபாண்டிய கட்டப்பொம்மன் தலைமை வகித்தார். இணை ஒருங்கிணைப்பாளர்கள் சாதகன், அந்தோணியம்மாள், மாரியம்மாள், முருகேசன், அழகுக்கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் ஜெயலட்சுமி வரவேற்றார். மாவட்ட நிதிக்காப்பாளர் ஏ.பாக்கியசீலி தொடக்கவுரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் எபனேசர் டேனியல் தனராஜ், மரிய அந்தோணி ரூஸ்வெல்ட், உத்தண்டராமன், கனகவேல், பலவேசம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.