சிங்கம்புணரி அருகே உள்ள காப்பாரப்பட்டியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் என்பவர் மகன் சேவுகப்பெருமாள்(35). இவரது மனைவி ராணி(30). இவர்கள் இருவருக்கும் 12 வருடங்களுக்கு முன்பு திருமணமானது. https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சேவுகப்பெருமாள் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவி ராணி மீது சந்தேகப்பட்டும், தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியும் வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவிலிருந்து கணவன் மனைவிக்குள் பிரச்சனை அதிகமாகியுள்ளது. நேற்று மாலை சேவுகப்பெருமாள் குடித்துவிட்டு வந்து, வழக்கம்போல் மனைவி ராணியைத் தாக்கிவிட்டு தூங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தூங்கிக் கொண்டிருந்த கணவன் சேவுகப்பெருமாள் மீது மனைவி ராணி ஆத்திரத்தில் கிரைண்டர் கல்லை தூக்கிப் போட்டிருக்கிறார். இதனால் முகத்தில் காயமடைந்த சேவுகப்பெருமாள், சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்பு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சம்பவம் குறித்து சிங்கம்புணரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.