NALAIYA VARALARU
சேவியர் கல்லூரியின் 100 வது ஆண்டு விழாவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பு!
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில்தூய சேவியர் கல்லூரியில் நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது இந்த விழாவில் தமிழக நிதி மற்றும். மனித வள மேம்பாடு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
பழனிவேல் தியாகராஜன் பேசுகையில் :
தென் தமிழகத்தில் கல்வி, சமுக நலன், மற்றும் பெண்கல்வி என அனைத்து சமுக முன்னேற்றத்திலும் கிறிஸ்துவ மிஷனரிகள் பெரும் பங்கு வகித்திருப்பது பாராட்டிற்குரியது திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் உயிர் மூச்சாக சமூக நீதி உள்ளது. சமுதாயம் சமூக நீதியை அடைய கல்வியை தவிர வேறு பாதையில்லை.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தமிழகத்தில் கல்வி வளர்ச்சி அதிகமாக இருக்கும் பகுதிகளாக கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்கள் திகழ்ந்து வருகிறது ஆனால் வேலைவாய்ப்பும், பொருளாதாரத்தில் முன்னேறிய நிலை இல்லாமல் இருக்கிறது எனவே தென்மாவட்டத்தில் வேலைவாய்புகளை உருவாக்கும் வகையில் வளர்ச்சி திட்டப்பணிகள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
மேலும் நம் நாட்டை பிரிவினை வாதம் சூழ்ச்சியால் அரசியல் செய்து வரும் நிலையில் 100 ஆண்டுகளாக கல்வி சேவையாற்றி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இந்த கல்லூரி திகழ்கிறது , ஆண்டுக்கு 60 சதவீதம் முதல் தலைமுறை பட்டதாரிகளை உருவாக்கி இந்த கல்லூரி சமூக நீதிக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. 50 சதவீதம் பெண்கள் படித்து வருகிறார்கள் என்பதும் பாராட்டுக்கு உரியது என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி அதிபர் அருட்திரு. ஹன்றிஜொரோம், செயலாளர் புஷ்பராஜ், முதல்வர் அருட்திரு மரியதாஸ் மற்றும் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப், மேயர் சரவணன், மாநகர செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் திரளான மாணவ மாணவிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.