NALAIYA VARALARU
தேவதானப்பட்டி காவல்துறையினரின் தொண்டுள்ளத்திற்கு பொதுமக்கள் பாராட்டு!!
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட காட்ரோடு அருகில் நூல் தோப்பு பகுதியில் மேரி சேகர் என்னும் முதிய தம்பதியரில். சேகர் என்பவர் உடல்நல குறைவு காரணமாக இறந்து விட்டார். உற்றார் உறவினர்கள் யாரும் இவர்களுக்கு கிடையாது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கடும் வறுமையிலும் எந்த ஒரு உதவியும் இன்றி தவித்த மேரிக்கு தனது கணவரின் உடலை நல்லடக்கம் பண்ண கூட எந்த ஒரு முகாந்திரமும் இல்லாத நிலையில்., தேவதானப்பட்டி காவல் துறையின் சார்பாக சார்பு ஆய்வாளர் வேல் மணிகண்டன்., காவலர்கள் பால்பாண்டியன் குணசேகரன் CID ஆகியோர் இணைந்து., தங்களது சொந்த செலவில் இடைவிடாத மழை தூரல் மற்றும் மின்சாரம் இல்லாத சூழ்நிலையில் உடலை நல்லடக்கம் செய்தது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
தேவதானப்பட்டி காவல்துறையினருக்கு பொதுமக்கள் தங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்!!!
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை