NALAIYA VARALARU
புதுப்பச்சேரி ஸ்ரீ அழகுமுத்து அய்யனார் கும்பாபிஷேகம் கடம்பூர் ராஜூ பங்கேற்பு!!!
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதி புதியம்புத்தூர் அருகில் புதுப்பச்சேரி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ அழகுமுத்து அய்யனார் மாறா கும்பாபிஷேகம் விழா நேற்று மாலை நடைபெற்றது .
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர்,கழக அமைப்புச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி பொருளாளர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு MLA அவர்கள் கலந்து கொண்டார்.
விழாவின் முக்கிய நிகழ்வான முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இதில் 100க்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு கோவில் வந்து அடைந்தது பின்னர் சிறப்பு பூஜை செய்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இன்று காலை மஹா அன்னதானம் நடைபெறுகிறது அதனை தொடர்ந்து அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடைபெறுகிறது. இந்த விழாவில் ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கழக செயலாளருமான P.மோகன் Ex MLA அவர்கள் மற்றும் ஒட்டப்பிடாரம் முன்னாள் யூனியன் சேர்மன் கிழக்கு ஒன்றியம் கழக செயலாளர் காந்தி என்ற காமாட்சி மற்றும் பல்வேறு கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.