புரோஜோன் வணிக வளாகத்தில் பி. எஸ்-2 படத்தில் இடம்பெற்ற போர்கால உபகரணங்களின் கண்காட்சி!!

புரோஜோன்

புரோஜோன்

NALAIYA VARALARU

புரோஜோன் வணிக வளாகத்தில் பி. எஸ்-2 படத்தில் இடம்பெற்ற போர்கால உபகரணங்களின் கண்காட்சி!!

கோவை சரவணம்பட்டி புரோஜோன் மாலில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படத்தில் பிரபல நடிகர்கள் பயன்படுத்திய ராஜ சிம்மாசனம், மகுடம், கேடயம் மற்றும் ஈட்டி போன்ற போர்கால உபகரணங்களின் கண்காட்சி இன்று துவங்கியது.

இது குறித்து புரோ ஜோன் மாலின் தலைமை மேலாளர் (நிதி மற்றும் நிர்வாகம்) திரு. பி பாபு, மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் பிரிங்ஸ்டன் நாதன், செயல் இயக்கத் தலைவர் திரு. முசாமில், ஆகியோர் கூறும்போது :- இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ள அனைத்து பொருட்களும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படத்தில் இடம் பெற்ற போர்க்கால பொருட்கள் ஆகும். புரோ ஜோன் மால் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அனைத்து விதத்திலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பல கண்காட்சிகளை நடத்தி வருகிறது. துவங்கிய இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ள அனைத்து பொருள்களும் பிரபல திரைப்பட கலை இயக்குனர் திரு. தோட்டா தரணி அவர்களின் கைவண்ணத்தில் உருவானவை.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

திரைப்படத்தில் மட்டுமே பார்த்து ரசித்த போர் கால பொருட்களை கோவை வாடிக்கையாளர்கள் நேரில் கண்டு ரசிக்க ஒரு வாய்ப்பை புரோஜோன் மால் ஏற்படுத்திக் தந்துள்ளது. இந்த கண்காட்சியை காலை 10 மணி முதல் நள்ளிரவு வரை வாடிக்கையாளர்கள் இலவசமாக கண்டு செல்பி எடுத்துக் கொள்ளலாம்.

கண்காட்சி பொதுமக்கள் பார்வைக்கு நேற்று (12.04.2023) முதல் ஒரு வார காலத்திற்கு வைக்கப்பட்டிருக்கும்.

-சீனி, போத்தனூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp