NALAIYA VARALARU
வால்பாறையில் பிச்சை எடுப்பது போல் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு!!
கோவை மாவட்டம் வால்பாறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் பரமசிவம் அவர்கள் வால்பாறை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் நலனுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். அதற்காக அரசு அதிகாரிகளிடம் பல்வேறு மனுக்களை கொடுத்துள்ளார்.
இந்நிலையில் வால்பாறையில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் முகாம் நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் நடைபெற்ற மக்கள் நேரடி முகாமில் இதுவரை கொடுக்கப்பட்ட புகார் மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் அரசு சார்ந்தவர்கள் எடுக்கவில்லை.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நேரடியாக கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் மற்றும் பொள்ளாச்சி சப் கலெக்டர் முன்னிலையில் எஸ்டேட் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் பொதுமக்கள் நலனை கருதி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் மனுக்களை பிச்சை எடுப்பது போல் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கப்பட்டது.
இந்த மனுவை பரிசீலனை செய்த ஆட்சி தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு உறுதி அளித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.