கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட சிறு குன்றா எஸ்டேட் பகுதியில் குடியிருந்து வரும் வடமாநில தொழிலாளி கீதா முனி குமாரி (வயது 22) என்பவர் (அருகிலுள்ள காடு எண் 35.) தேயிலைத் தோட்டத்தில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அருகில் கூழாங்கல் ஆற்றுப்பகுதியில் தேயிலை காட்டுக்குள் பதுங்கி இருந்த சிறுத்தை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வட மாநிலப் பெண்ணை காலை 11 மணியளவில் தாக்கியதில் அப்பெண் படுகாயம் அடைந்தார். மற்றும் சக தொழிலாளர்கள் உடனே கூச்சலிட்டு சிறுத்தையை துரத்தி பெண்ணை வால்பாறை அரசு பொது மருத்துவமனை க்கு முதல் உதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சிகிச்சை பெற்று வரும் வட மாநிலப் பெண்ணை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் நலம் விசாரித்துள்ளார்கள் மற்றும் இரண்டு வாரத்திற்கு முன்பு சங்கிலி ரோடு பகுதியில் வீட்டின் முன்பு விளையாடிய வட மாநில சிறுவனை சிறுத்தை தாக்கியதில் சிறுவன் அதிர்ஷ்டவசமாக சிறு காயத்துடன் உயிர் தப்பினார். இதனால் வால்பாறை பகுதியில் அதிகரித்து வரும் சிறுத்தையின் தாக்குதல்களால், மக்கள் அச்சத்தில் வேலை செய்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. வனத்துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-சி.ராஜேந்திரன். கோவை மாவட்டம்.