NALAIYA VARALARU
வால்பாறை நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் குடியிருப்பின் அவல நிலை!! நடவடிக்கை எடுப்பார்களா?
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட நகராட்சி தூய்மை பணியாளர்களின் குடியிருப்புகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றன. இந்த குடியிருப்பின் மேற்கூரைகள் ஆங்காங்கே உடைந்து சிதிலமடைந்து காணப்படுவதினால் மழை பெய்யும் சமயங்களில் மழைத்தண்ணீர் உள்ளே புகுந்து மிகவும் கஷ்டமான சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் இந்த குடியிருப்புகள் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் இந்த குடியிருப்பில் வாழும் தூய்மை பணியாளர்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.எனவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த குடியிருப்பை ஆய்வு செய்து தூய்மை பணியாளர்களின் குடியிருப்பில் உள்ள குறைபாடுகளை நீக்கி புதுப்பித்து தருவதற்கான நடவடிக்கை எடுக்க தூய்மை பணியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள் பல நாட்களாக உடைந்து காணப்படும் குடியிருப்பில் மழைக்காலங்களில் தண்ணீர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதால் குடியிருப்பு வாசிகள் அச்சத்தில் குடியிருந்து வருகிறார்கள்.
எனவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தூய்மை பணியாளர்களின் அச்சத்தை போக்கி குடியிருப்பில் உள்ள குறைபாடுகளை நீக்கி தரவேண்டும் என்பதே தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.